கொழும்பில் ஆபாச காணொளிகள் உள்ளதாக கூறி பணம் கொள்ளையடிக்க முயற்சித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாச காணொளிகள் பல தன்னிடம் உள்ளதாகவும் அதனை இணையத்தில் வெளியிடுவதாகவும் பலருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இலங்கையின் பிரபல வீடு மற்றும் காணி விற்பனை நிறுவனத்தின் உரிமையாளரிடம் 60 இலட்சம் ரூபா கப்பம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் அந்த நிறுவனத்தில் முகாமையாளராக சேவை செய்யும் கொழும்பு, டொரின்டன் பிளேஸ் மாடி வீட்டில் வசிக்கும் தமாரி நிரோஷனி என்பவரே இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் காதலன் என கூறப்படுகின்ற நபரின் ஆலோசனைக்கமைய இந்த கப்பம் பெற முயற்சி திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய சந்தேக நபரினால் குறித்த கப்பம் பண பையை பெற்றுக் கொள்ள தயாரான சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாச காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதை தவிர்க்க 3 கோடி ரூபா பணம் வழங்கப்பட வேண்டும் என்பதே குறித்த பெண்ணின் கோரிக்கை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.