இலங்கை தமிழர்களின் படுகொலையை ஆதாரத்துடன் வெளியிட்ட பெர்னாண்டஸ் உயிரிழந்தார்

இந்திய முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் 1930ம் ஆண்டு பிறந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் 1967 மக்களவைத் தேர்தலில் சம்யுக்த சோஷலிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சங்க தலைவர் பதவி அவரைத் தேடி வந்தது. 1975-ல் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார்.

தலைவர்கள் சிறையில் அடைக்கபப்ட்டனர். ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டன. அப்போது பெர்னாண் டஸ், மீனவர் மற்றும் சீக்கியர் வேடத்தில் மாறுவேடம் பூண்டு சுற்றினார். எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடந்த மாநிலங்களான குஜராத், தமிழ்நாட்டில் தலைமறைவாக செயல்பட்டு அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார். இதனால் எமர்ஜென்சி ஹீரோ என்று அழைக்கப்பட்டார்.

ஈழ விடுதலை ஆதரவாளர்களுக்கு இவரது வீடு, புகலிடமாக இருந்தது என்பார்கள். கடந்த 1983-ம் ஆண்டில் இந்திய அமைதி படை, இலங்கையில் தமிழர் பகுதியில் நடத்திய படுகொலைச் புகைப்பட ஆதாரங்களுடன் நூலாக வெளியிட்டவர் இவர். இதனால் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு, படுக்கையில் இருந்த பெர்ண்டாண்டஸ், தனது 88 வது வயதில் இன்று உயிரிழந்தார்.