போதை தலைக்கேறி போலீஸ் பாருக்குள் போர் நடத்தி ரகளை.!!

இந்த உலகத்தில் பல்வேறு விதமான பிரச்சனைகள் இருந்து வருகிறது. அந்த பிரச்சனைகளில் அறவே ஒழிக்க வேண்டிய ஒன்று என்றால் அது மதுபானங்கள். இந்த மது பானங்கள் மூலமாக பல்வேறு குடும்பங்கள் வறுமையில் வாடி வருவதையும்., பல குடும்பங்கள் தெருவில் நிர்கதியாய் நிற்பதையும் அறிவோம்.

மதுபானங்களை அருந்துவதை ஒரு காலகட்டத்தில் பணி சுமையின் காரணமாக அருந்துகிறோம் என்று கூறிய காலகட்டம் எல்லாம் மலையேறி., தற்போது சந்தோசத்தை தர கூடிய சுப நிகழ்ச்சிகளிலும்., துக்க நிகழ்ச்சிகளிலும் சரக்கு வாங்கி தரவில்லை என்ற பிரச்சனையும்., மதுபானங்களை வாங்கி வைத்து நண்பர்களுக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மது அருந்துவதன் காரணமாக பல்வேறு விதமான பிரச்சனைகள் இருந்து வரும் நேரத்தில்., அந்த பிரச்சனைகள் குறித்து பல முறை அவர்களுக்கு (மது அருந்துபவர்களுக்கு) எடுத்து கூறினாலும் அவர்கள் கேட்கும் நிலைமையில் இல்லை. பூரண மதுவிலக்கை அமல்படுத்த கூறி யார் எடுத்து கூறினாலும்., அதனை ஏற்றுக்கொள்ளாத அரசு., படி படியாக மதுவிலக்கை அமல்படுத்தலாம் என்று கூறி வருகிறது.

எந்த விதமான பண்டிகைகள் வந்தாலும் தனது முதல் அறிக்கையாக டாஸ்மார்க் வசூல் இலக்கை நிர்ணயம் செய்யும் அரசு இருக்கும் வரை எந்த விதமான பயனும் பெறப்போவதில்லை., இந்த பிரச்சனையில் தற்போது காவல் துறையினர் ஈடுபட்டிருப்பது பெரும் மனவேதனையை அளிக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரி ஒருவர் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டிருப்பது பெரும் பிரச்னையை ஏற்படுகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவல் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன். இவர் அங்குள்ள தூக்குமேடை பகுதியில் இருக்கும் அரசு மதுபானக்கடைக்கு சென்று மது அருந்தியுள்ளார். மது அருந்திய போதையில் இருந்த அவர் அங்குள்ளவர்களிடம் தொடர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் மாவட்ட எஸ்.பிக்கு தகவல் வழங்கினர்.