இறுதிச்சடங்கின்போது திறந்த சவப்பெட்டி! அலறிய உறவினர்கள்!

தங்கள் அன்பிற்குரிய ஒரு பெண்மணியின் சவப்பெட்டியை புதைப்பதற்காக குழிக்குள் இறக்கும் நேரத்தில் ஒருவர் தவறி பெட்டியின் மீது விழ, பெட்டி திறந்து அந்த பெண்மணியின் உடல் பாதி வெளியே வந்ததைக் கண்டு அவரது உறவினர்கள் அலறி கூக்குரல் எழுப்பிய சம்பவம் பெரு நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வெளியான வீடியோ ஒன்றில், பெருவில் நடைபெற்ற ஒரு முதிய பெண்மணியின் இறுதிச் சடங்கின்போது பெட்டியை குழிக்குள் இறக்கும் நடவடிக்கையில் நான்கு பேர் ஈடுபட்டிருக்கின்றனர்.

அப்போழுது ஒருவர் தவறி சவப்பெட்டியின் மீதே விழ, சவப்பெட்டி குழிக்குள் விழுகிறது.

அந்த நபரும் பெட்டியின்மீது விழுந்ததில் பெட்டி திறந்து பெட்டிக்குள் இருந்த பெண்மணியின் உடல் பாதி பெட்டிக்கு வெளியில் சரிய, பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண்மணியின் உறவினர்கள் அதிர்ச்சியில் கூக்குரல் எழுப்புகின்றனர்.

பெட்டியை குழிக்குள் இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்களும், பயந்து, அதிர்ச்சியடைய, பின்னர் மீண்டும் அவரது உடலை பெட்டிக்குள் வைப்பதற்காக பெட்டியை வெளியே எடுக்கின்றனர்.

தங்கள் அன்பிற்குரியவரின் உடல் இப்படி அலைக்கழிக்கப்படுவதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது அவரது குடும்பம்.

பின்னர் சரியான முறையில் பெட்டி மூடப்பட்டு சடங்குகள் செய்து முடிக்கப்பட்டதாம்.

என்றாலும் பல நாடுகளில் அடக்கத்தின்போது சவப்பெட்டி திறப்பது அபசகுனமாக கருதப்படுவதால், அந்த குடும்பத்தினரால் தங்கள் அன்பிற்குரியவருக்கு நடந்த அசம்பாவிதத்தை மறக்க வெகு காலம் ஆகலாம்.