தவறான பழக்கத்தால் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்.!

இலங்கை நாட்டில் இருக்கும் கொழும்பில் அமைந்துள்ள உணவு விடுதியில் சமையல் செய்பவராக 45 வயதுடைய நபர் ஒருவர் பணியாற்றி வருந்துள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அங்குள்ள கல்லூரியில் பயின்று வரும் மாணவியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை தவறான பாதையில் உபயோகம் செய்ய முடிவு செய்த அவர் தன்னை ஒரு பிரபல உணவு விடுதியின் உரிமையாளர் என்று அறிமுகம் செய்துள்ளார்.

இதனை நம்பிய அந்த மாணவியிடம்., தம்மை காதலிப்பதாக கூறியுள்ளார். இவரை நம்பிய அந்த பெண்ணும் எந்த விதமான பதிலும் தெரிவிக்காத சமயத்தில்., அவ்வப்போது அந்த பெண்ணை காணுவதற்கு செல்லும் அந்த நபர் விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் பணம் அடிக்கடி வழங்கி வந்துள்ளார்.

இதனை கவனித்த அந்த நபரின் மனைவி உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் மனு அளித்துள்ளார். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., சம்பவம் குறித்து மாணவி மற்றும் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

காவல் துறையினரின் விசாரணையில்., உணவு விடுதியின் உரிமையாளர் என்று அறிமுகம் செய்த அந்த நபர் தம்மை காதலிப்பதாக கூறி அவர் அடிக்கடி வந்த பணம் மற்றும் இதர பொருட்களை வாங்கி வந்து தருவார்., அவர் சமையல் கடையில் பணியாற்றும் ஊழியர் என்று எனக்கு தெரியாது., மேலும்., அவருக்கு திருமணம் முடிந்த தகவலும் எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.

அந்த நபரின் மனைவி வழங்கிய மனுவில் இரண்டு பிள்ளைகளை வளர்க்க முடியாமல் தவித்து கொண்டு வரும் எனக்கும் இல்லத்திற்கும் தேவையான பண உதவிகளை வழங்காமல்., இந்த வயதில் காதல் என்ற பெயரில் மற்றொரு பெண்ணிற்கு பணம் வழங்கி வருகிறார் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பிரச்சனை குறித்து விசாரணை செய்த காவல் துறையினர் அந்த பெண்ணின் அறிவுறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.