சிறைத்தண்டனை பெற்ற பிரித்தானிய பெண்: கண்ணீருடன் கூறிய ஆசை…

காதலனுக்கு முதுகு வலி மாத்திரை கொண்டு சென்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டு 14 மாதங்களுக்கு பின் வீடு திரும்பிய பிரித்தானிய பெண், இனி ஜென்மத்திற்கும் விமான நிலையம் செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த லாரா பிளம்மர் என்கிற 34 வயது பெண், கடந்த 2017ம் ஆண்டு முதுகு வலியால் அவஸ்தையடைந்த தன்னுடைய காதலன் ஓமர் கேபுவிற்கு மருந்தாக Tramadol மாத்திரைகளை கொண்டு சென்றார்.

எகிப்து விமான நிலையத்தில் இறங்கியதும் அவரது உடமைகளை சோதனை செய்த அதிகாரிகள், 290 Tramadol மாத்திரைகளை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.

Tramadol மாத்திரைகள் பிரித்தானியாவில் அனுமதிக்கப்பட்டாலும் கூட பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடிய மாத்திரை என்பதால் எகிப்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் திங்கட்கிழமையன்று நடந்த மனு மீதான விசாரணையில் வருக்கு ஜாமீன் வழங்ப்பட்டது. இதனையடுத்து இன்று பிரித்தானியாவிற்கு திரும்பிய லாராவை அவருடைய சகோதரிகள் லிண்டா மற்றும் ரேச்சல் ஹீத்ரோ விமான நிலையத்தில் வரவேற்றனர்.

அவர்களை கண்ணீருடன் கட்டியணைத்த லாரா, “இந்த நாள் ஒருபோதும் வரப்போவதில்லை என நினைத்தேன்”.

“நான் வீட்டிற்கு சென்று, நீண்ட நேரம் குளிக்க வேண்டும் மற்றும் என் சொந்த படுக்கையில் நன்கு படுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும், தான் இனி ஒருபோதும் விமான நிலையம் செல்ல மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.