இங்கிலாந்தில், குளத்தில் மூழ்கிய தன்னுடைய தோழியை காப்பாற்றிய சிறுமி பரிதாபமாக இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த டெயா டேவிஸ் என்கிற 14 வயது சிறுமி தன்னுடைய தோழிகள் இருவருடன் வீட்டிற்கு அருகாமையில் உள்ள இயற்கை பூங்காவிற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த ஒரு குளத்தை பார்த்ததும், அதன் கரைமேல் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருக்க ஆரம்பித்துள்ளனர். மற்றொரு சிறுமி சிறிது தூரம் தள்ளி, புல்தரையில் அமர்ந்திருந்துள்ளார்.
அப்பொழுது திடீரென டெயாவுடன் அமர்ந்திருந்த சிறுமி கால் தடுமாறி, குளத்தில் விழுந்துள்ளார். அவருடைய சேர்ந்து, டெயாவும் உள்ளே குதித்துள்ளார். ஆரம்பத்தில் இருவரும் தண்ணீரில் விளையாடி மகிழ்ந்துள்ளனர்.
ஆனால் சிறிது நேரம் செல்லச்செல்ல, இருவரும் நீருக்குள் மூழ்கடிக்கப்படுவதை உணர்ந்துள்ளனர். இருவரும் அலறும் சத்தம் கேட்டு வேகமாக ஓடிவந்த மற்றொரு சிறுமி, கையை பிடித்து ஒரு சிறுமியை மட்டும் மேல் தூக்க முயற்சித்துள்ளார்.
நீரில் இருந்தபடி, டெயா அந்த சிறுமியை மேல்நோக்கி தள்ளி காப்பாற்றியுள்ளார். அவரை காப்பாற்றி முடித்ததும், உதவி கேட்டு இரண்டு சிறுமிகளும் கூச்சலிட ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதற்குள் டெயா நீருக்குள் மூழ்கிவிட்டார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த பொலிஸார் ஒருவர், வேகமாக உள்ளே குதித்து சிறுமியை தேடியுள்ளார். அந்த நீர் சூடாக இருந்ததோடு மட்டுமின்றி, கருப்பு நிறத்தில் இருந்ததால் கண்டுபிடிக்க முடியாமல் திணறியுள்ளார்.
இதற்கிடையில் அங்கு வந்த மீப்பு படை வீரர்கள் 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் சிறுமியின் உடலை 2.5 மீட்டர் ஆழத்தில் இருந்து மீட்டனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபொழுது, சிறுமியின் இறப்பு தற்காலிகமானது என முடித்து வைக்கப்பட்டது. மேலும் அந்த குளம் அருகே எச்சரிக்கை பலகை வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.