விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்திற்கு சென்ற பிரித்தானிய இளவரசி கேட் முடியை சிறுமி ஒருவர் பிடித்து விளையாடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இளவரசர் வில்லியம் தன்னுடைய மனைவி கேட் உடன் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டார்.
அருங்காட்சியகத்திற்கு துவக்கத்தில் அமைந்திருக்கும் உள்ளூர் பள்ளியை பார்வையிட்ட தம்பதி, குழந்தைகள் கொடுத்த வாழ்த்து பூக்களை பெற்றுக்கொண்டதோடு, அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினர்.
அதன் பிறகு அருங்காட்சியகத்திற்கு வெளியில் நின்று கொண்டிருந்த குழந்தைகள் என பலரையும் சந்தித்தனர். தன்னுடைய 9 மாத இளவரசர் லூயிஸ் பற்றிய தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது ஒரு சிறுமி, இளவரசியின் முடியை பிடித்துகொண்டே பேசிக்கொண்டிருந்தார்.
அதனை ரசித்தபடியே இளவரசியும் அவருக்கு பதில் கொடுத்தார்.
இந்த வீடியோ காட்சியானது தற்போது இணயதளத்தில் வைரலாக பரவி வருகிறது.