இரவு நேரங்களில் கணவனின் ஆபாச சேட்டைகள்…. உறுதுணையாக இருந்த மனைவி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணை குழந்தைகள் விடுதியில் இருந்து 19 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆதரவற்ற நிலையில் உள்ள 11 வயதில் இருந்து 15 வயதுக்குட்பட்ட 19 பெண் குழந்தைகள் இங்கு தங்கி பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இங்கு குழந்தைகள் நல அலுவலர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

தங்களை பாலியல் ரீதியாக இந்த விடுதியை நடத்தும் வினோத்குமார் தொந்தரவு செய்வதாகவும் அவருக்கு அவரது மனைவி உடந்தையாக இருந்ததாக மாணவிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இரவு நேரங்களில் ஆபாச படங்கள் டிவியில் ஒளிபரப்பி அதனை அந்த இளம் சிறார்களை பார்க்க தூண்டி உள்ளனர், மேலும் ஆபாச நடனம் ஆடச் சொல்லி வற்புறுத்தி, ஆடவைத்துள்ளனர்.

அந்த விடுதியில் இருந்து மீட்கப்பட்ட 19 பெண் சிறார்களும் அரசு நடத்தும் விடுதிக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து திருவண்ணாமலை நகர பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.