பிரபல இயக்குநருக்கு நேர்ந்த கதி…

கேரள ஹொட்டல் ஒன்றில் தனக்கு இனவெறி அனுபவம் ஏற்பட்டதாக இந்தி திரையுலகின் பிரபல இயக்குநர் சஞ்சய் குப்தா குற்றம்சாட்டியுள்ளார்.

சஞ்சய் குப்தா தனது டுவிட்டர் பக்கத்தில், கேரள மாநிலம் கொச்சி துறைமுகம் பகுதியில் உள்ள ஒரு ஹொட்டலுக்கு சென்று இருந்தேன். அதில் குறிப்பிட்ட டேபிள் காலியாக இருந்தது.

ஆனால் அதை வெள்ளைக்காரர்களுக்கு ஒதுக்கி இருப்பதாக சொல்லி இந்தியர்கள் அதில் உட்கார அனுமதி மறுத்தனர். வாழ்க்கையில் முதல் தடவையாக இப்படி ஒரு இனவெறி அனுபவம் தனக்கு ஏற்பட்டது என்று பதிவிட்டிருந்தார்.

இந்தியாவிலேயே இந்தியருக்கு எதிராக இனவெறியா? என்று சிலர் கண்டித்தனர்.

சஞ்சய் குப்தா குழுவினர் முன்கூட்டி தகவல் தெரிவிக்காததால் இருக்கை ஒதுக்க முடியவில்லை. அதே நாளில் 2 குழுவினர் இருக்கையை ரிசர்வ் செய்து இருந்தனர். ஹொட்டல் சேவை சிறப்பாக இருப்பதால் நிறைய பேர் இங்கு வருகிறார்கள்.

சஞ்சய்குப்தா சில நிமிடங்கள்தான் அங்கு இருந்தார். கண்காணிப்பு கமெராவில் யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என்று சஞ்சயின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.