திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ரமணா நகரில் கடந்த சில வருடங்களாக அருணை குழந்தைகள் விடுதி என்ற தனியார் அமைப்பின் மூலமாக விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த விடுதியில் சுமார் 11 வயது முதல் 15 வயது வரை உள்ள 15 பெண் குழந்தைகள் தங்கி பயின்று வந்தனர்.
இந்த விடுதிக்கு குழந்தைகள் நல அலுவலகர்., வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய திட்டமிட்டு., அதன் படி நேரில் சென்று ஆய்வு செய்தனர். அந்த சமயத்தில் விடுதியின் வசதிகள் குறித்தும் பெண் குழந்தைகளிடம் கேட்டறிந்தனர்.
அந்த சமயத்தில் குழந்தைகள் விடுதியை நடத்தும் வினோத்குமார் தங்களை பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாகவும்., இந்த விசயத்திற்கு வினோத்குமாரின் மனைவி உடைந்தையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு ஆத்திரமடைந்த அதிகாரிகள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்து., அதன் பேரில் அவரை அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்., குழந்தைகள் நல அதிகாரிகளிடம் குழந்தைகள் தெரிவித்ததாவது., இரவு நேரங்களில் தொலைக்காட்சிகளில் ஆபாசமான படங்களை ஒளிபரப்பு செய்து கட்டாயமாக அதனை பார்க்கவைத்து., ஆபாச நடனம் ஆடச்சொல்லி கொடுமை படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட அதிகாரிகள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்து., காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காப்பகத்தில் இருந்த அனைத்து சிறுமிகளும் அரசு விடுதியில் பாதுகாப்பாக மாற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்., இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.