துள்ளி விளையாடிய சிறுவன்! தலைநசுங்கி ரத்தவெள்ளத்தில் துடிதுடிக்க நேர்ந்த விபரீதம்.!

போரூர் பகுதியில் கணேஷ் அவென்யூ, 8-வது தெருவில் வசித்து வருபவர் ஏழுமலை.இவர் கூலிதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 6 வயதில் விஷால் என்ற மகன் இருந்தான். அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்த ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளான்.

இந்நிலையில், அவன் தனது வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட் அடுக்குமாடி குடியிருப்பின் முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கதவை பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தான்.

அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென அந்த இரும்புக்கதவு சிறுவன் விஷால் மீது விழுந்தது .இதில் தலை நசுங்கி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த விஷால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான்.
இதுகுறித்துபோலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்து போன சிறுவன் விசாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அந்த கட்டிடத்தின் கட்டுமான என்ஜினீயரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.