டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரேந்தர் குமார் (78), சரளா (71) ஆகிய இருவரின் உடல்கள் அழுகிய நிலையில் கடந்த 26 ஆம் திகதி அவர்களது குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டது.
. உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில், 50 வயது மதிக்கத்தக்க பெண் இவர்களது வீட்டில் வேலை செய்துள்ளார். மேலும் குடியிருப்பின் சிசிடிவி கமெராவில், சிறுவன் ஒருவன் சந்கேத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டது தெரியவந்தது.
அந்தச் சிறுவனைப் பிடித்து காவலர்கள் விசாரணையை மேற்கொண்டனர். முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய நிலையில், காவலர்களின் கிடுக்குப்பிடி விசாரணையில் பணத்திற்காக வயதான தம்பதியினரைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார்.
அச்சிறுவன் அளித்துள்ள வாக்குமூலத்தில், இந்த கொலையை செய்வதற்கு திட்டம் போட்டு கொடுத்தது எனது தாய். சம்பவம் நடைபெற்ற அன்று சரளா மட்டும் வீட்டில் இருந்தார். அன்று நானும் எனது அம்மாவுடன் சென்றேன்.
எனது அம்மா வேலைகளை முடித்துவிட்டு சென்றுவிட்டார், நான் வீட்டிற்குள் மறைந்துகொண்டேன். பின்னர், பீரோ சாவியை கொடுக்குமாறு சராளவிடம் கேட்டேன், அவர் தனது கணவரிடம் இருப்பதாக கூறினார்.
இதனால், ஆத்திரத்தில் சரளாவை கீழே தள்ளி கொலைசெய்துவிட்டு அவர் கணவர் வரும் வரை வீட்டிலிலேயே மறைந்திருந்தேன். அதன்பின்னர், கணவர் வீட்டுக்கு வந்தவுடன், அறையில் கிடந்த தனது மனைவியை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி சாவியை கொடுக்கும்படி கேட்டேன், அவரும் பயத்தில் செய்தவறியாமல் சாவியைக் கொடுத்தார். அவரது கழுத்தில் கத்தியைக்கொண்டு கீறிவிட்டு, வீட்டில் இருந்த பணம் நகைகளைக் கொள்ளையடித்தேன். இரவு முழுவதும் அந்த வீட்டிலே அவன் தங்கிவிட்டு, காலையில்தான் அங்கிருந்து வெளியேறினேன் என வாக்குமூலம் அளித்துள்ளான்.
தாய் திட்டம் போட்டு கொடுக்க சிறுவன் செய்துள்ள கொலையை கேட்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.