நாம் முக அழகிற்காக எவ்வளவே வழிமுறைகள் இன்று வரையிலும் பயன்படுத்தி கொண்டு வருகின்றோம்.
இதற்காக பணத்தை செலவழித்து கண்ட கண்ட கிறீம்கள் கடைகளில் விற்கப்படும் செயற்கை மருந்தகளை என்பவற்றை உபயோகித்து வருகின்றோம்.
உண்மையில் இது எமது முகத்திற்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதற்கு நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு முகத்தினை இயற்கை முறையில் பளீச் என மாற்ற முடியும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலை விட பால் பவுடரில் சில ஊட்டச்சத்துக்களின் காம்பவுண்ட்டுகள் சேர்க்கப்பட்டிருக்கும். அது சருமத்தை மென்மைப்படுத்த உதவும். தற்போது பால் பவுடரை கொண்டு முகத்தினை எப்படி அழகுப்படுத்துலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
- கனிந்த பப்பாளி – 1 டேபிள் ஸ்பூன்
- ரோஸ்வாட்டர் – சில துளிகள்
பயன்படுத்தும் முறை
மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு மசித்து பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ளுங்கள்.
சில நிமிடங்கள் ஆனதும் அது மீண்டும் திக்கானது போல ஆகிவிடும். மீண்டும் சில துளிகள் ரோஸ்வாட்டர் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள்.
பின்னர் 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டு பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவவும். வாரம் இரண்டு முறை இதுபோல் செய்யலாம். ஓரிரு முறையிலேயே கவனிக்கத்தக்க மாற்றத்தை அடைவீர்கள்.