நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகை என்று பெயர் பெற்றவர் நடிகை பானுப்பிரியா. இவர் சமீபத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்யராஜ் மனைவியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், பானுப்ரியா வீட்டில் பணியாற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி புகார் வந்தது. ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் தாய் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், அந்த புகாரில். பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்க்கும் 15 வயது சிறுமிக்கு அவர் ஒராண்டிற்கும் மேலாக சம்பளம் கொடுக்கவில்லை எனவும், மேலும் பானுப்பிரியாவின் அண்ணன் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் அந்த சிறுமியின் தாயார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை பானுப்ரியா மீது குழந்தை தொழிலாளர் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, தொழிலாளர் நல ஆணையத்தில், குழந்தைகள் நல குழுமம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், நடிகை பானுப்ரியா மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோரி ஆந்திர டிஜிபிக்கு ஆந்திர குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பானுப்பிரியாவின் அண்ணன், நடிகை விந்தியாவின் முன்னாள் கணவர் ஆவார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு நடிகை விந்தியாவை திருமணம் செய்து, திருமணம் முடிந்த சில வருடங்களிலே விவாகரத்து செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.