உடலில் ரத்த குறைபாடு உள்ளவர்கள், அதிகம் பயன்படுத்த வேண்டிய ஒன்று பீட்ருட். இதனை பயன்படுத்தினால் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, உடல் நிறமும் பொலிவாக கூடும்.
பீட்ருட் ஒன்று,
தோசை மாவு- இரண்டு கப்
உப்பு- தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
பீட்ருட்டை அரைத்து விழுதாக எடுத்து கொள்ளவும்.
பின்னர் தோசை மாவுடன் இதனை கலக்கி கொள்ளவும். உப்பு தேவையான சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் சூடான பிறகு, மெல்லியதாக ஊற்றி, நெய் அல்லது எண்ணையை எடுத்து சுற்றி ஊற்றி வேகவைத்து இருபுறமும் காய்ந்த பிறகு எடுத்து பரிமாறவும்.
இதற்கு வேர்க்கடலை சட்னி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.