இந்தியாவில் ஆங்கிலோ இந்தியன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் பெரம்பூர், பாக்சன் தெருவில் உள்ள பிளாட்பாரத்தில் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரை கொலை செய்த நபர் அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருந்ததால், பொலிசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் ப்ரெயின் க்ளாக் (49) எனவும் அவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் அங்கிருந்த சிசிடிவி கமெராவை ஆராய்ந்த போது, நபர் ஒருவர் இவர் மீது கல்லைப் போட்டு கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
அதன் பின் அந்த நபர் யார்? இவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்று பொலிசார் அடுத்தடுத்து மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த நபரை கொலை செய்த நபர் பிளாட்பாரத்தில் வாழ்ந்து வருபவர் என்று தெரிந்தத்தால், அவரை தேடினர். அவரை தேடிக் கொண்டிருக்கும் போதே ப்ரெயின் க்ளாக்கின் பின்புலன்களை விசாரித்த போது, அவரின் குடும்பம் ஒரு வசதியான குடும்பம்.
படிப்பை முடித்த இவர் இங்கிருக்கும் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். மதுவிற்கு அடிமையானதால், இவர் வாழ்க்கை திசை மாறியுள்ளது.
வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு வெளியில் வந்து தங்கினார்.
அவுஸ்திரேலியாவில் இருக்கும் சகோதரருக்கு, இவர் மீது பாசம் என்பதால், அவ்வப்போது பணம் கொடுத்து உதவியுள்ளார்.
அதுமட்டுமின்றி வீட்டிற்கு மாதந்தோறும் தேவையான வாடகைகளையும் கொடுத்துள்ளார். இதனால் மனம் போல் வாழ்ந்து வந்த அவரின் நிலை ஒரு கட்டத்தில் எல்லை மீறியது.
இதனால் சகோதரர் பணம் கொடுத்து உதவவில்லை, குடிப்பதற்காக வீட்டின் அட்வான்ஸ் பணத்தை வாங்கி செலவு செய்து, அந்த வீட்டிலிருந்தும் வெளியேறி பிளாட்பாரத்தில் வந்து தங்கியுள்ளார்.
அந்த பிளாட்பாரத்தில் தான் சேகர் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது., இரண்டு பேருமே பிளாட்பாரத்தில் தங்கி கிடைத்த பணத்தை வைத்து சந்தோசமாக இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சேகர் ப்ரெயின் க்ளாக்கிடம் மது வாங்கிக் கொடுக்கும் படி கேட்டுள்ளார், இதற்கு அவர் மறுக்க பிரச்சனை ஏற்பட்டு ஆத்திரத்தில் கல்லை தூக்கி போட்டு சேகர் கொலை செய்துள்ளார்.
அதன் பின் தலைமறைவான அவரை பொலிசார் சிசிடிவி கமெராவின் ஆதார்ங்களை வைத்து மடக்கி பிடித்துள்ளனர்.
இந்த தகவலுக்கு பின் கிளார்கின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் உடலை வாங்காத காரணத்தினால், அவுஸ்திரேலியாவில் இருக்கும் அவருக்கு சகோதரருக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர், இந்த வார இறுதிக்குள் சென்னை வந்து ப்ரெயின் கிளாக்கின் சடலத்தைப் பெறுவதாக கூறியுள்ளார். வசதியான குடும்பத்தில் பிறந்த கிளார்க் வழி தவறிய நட்பால் இன்று உயிரை பறிகொடுத்துள்ளார்.