தமிழகத்தில் உள்ள சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் அணைத்து அரசியல் கட்சிகளுமே, சாதி பேசாமல், சாதி பார்க்காமல் இங்கு அரசியல் செய்வது என்பது இயலாதா காரியம். இதனை அணைத்து அரசியல் கட்சிகளுமே ஒப்புக்கொள்ளும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
சமீபத்தில் அப்படி நடந்த சாதி சங்க மாநாடு ஒன்று நடந்தது. தெலுங்கு சாதியான ”கம்மவார் நாயுடு” என்ற சாதி மாநாட்டில் கலந்துகொண்ட மதிமுக கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் ஒருவரும், அக்கட்சியின் தலைமை கழக பேச்சாளருமான தனமணி வெங்கட் அவர்களின் பேச்சு தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாக பொய் கொண்டிருக்கிறது.
சாதியே இல்லை என்ற திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்த மதிமுகவில் உள்ள ஒருவர் பேசும் பேச்சுக்கு மொத்த தமிழகமும் கொந்தளித்து போய் உள்ளது. அப்படி என்ன தான் பேசினார் என்று தானே கேட்கிறீர்கள், அவரின் பேச்சின் சுருக்கம்,
தமிழர்களை தெலுங்கர்கள்(கம்மவார் நாயுடு) தான் ஆள வேண்டும்.
கம்மவார் நாயுடு சாதியில் பிறந்தவர் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்க வேண்டாம்.
கண்டிப்பாக நாம் அரசியலில் இருக்க வேண்டும்.
நாம் (கம்மவார் நாயுடு) அரசியலில் இல்லை என்றல் நம் கம்மவார் நாயுடு சாதி அழிந்து விடும்.
தமிழகத்தின் அதிகாரம் நம் (கம்மவார் நாயுடு) கைகளில் இருக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் நாம்(கம்மவார் நாயுடு) எத்தனை சதவீதம் உள்ளோம். நாம் எந்த கட்சியில் இருந்தாலும் நம்ம கம்மவார் நாயுடு சாதி மக்களுக்காக மட்டும் வேலை செய்யுங்கள். நம்ம சாதியை சேர்ந்தவர்களுக்கு கட்சியில் போஸ்டிங் ஏற்பாடு செய்து தாருங்கள்.
நமக்குள் இன்னும் விழிப்புணர்வு வேண்டும்.
ஒரு சாதி கூட்டம் நடந்துச்சு, அது எந்த கூட்டம்னு சொல்ல விரும்பவில்லை, அவங்க என்ன பேசிக்கிட்டாங்க தெரியுமா? நாம கலெக்டர் ஆபீஸ்ல இப்ப எத்தனை பேர் இருக்கோம். நம்ம சாதியில் உள்ள எத்தனை பெற உள்ள கொண்டு வரலாம். அவங்கள வச்சு நாம என்ன எல்லாம் செய்யலாம்” இப்படி எண்ணம் பேசிக்குறாங்க.
அதேபோல நம்ம சாதியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வைக்கணும். சட்டத்துக்கு எதிராக நான் எதையும் செய்ய சொல்லல. சட்டத்துக்கு உட்பட்டு நம்ம சாதி மக்களுக்கு உதவி செய்யணும்னு சொல்லுறன்.
அரசர் மாலிக் கபூர் வந்து தமிழகத்தை அழித்துவிட்டு சென்றுவிட்டார். இப்ப இருக்கும் தமிழகத்தை நாம் (கம்மவார் நாயுடு) தான் ஆளவேண்டும். என்று தவமணி தெலுங்கு மொழியில் பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சுக்கு தமிழர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். தமிழர்களின் சாதிகளான தேவர், வன்னியர், பள்ளர், பறையர் மக்கள் இடையே சாதி சண்டையை மூட்டிவிட்டுவிட்டு, நாங்கள் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள், நாங்கள் தான் திராவிடர்கள் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு இப்படி சாதி வெறியுடன் இருப்பதாகவும், சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.