நமக்கே தெரியாத இரகசியம் – பிசிறு தட்டும் கூட்டம்..!

அல்வா (Halwa) என்பது கோதுமை மற்றும் சர்க்கரையிலிருந்து செய்யப்படும் ஒரு இனிப்பு உணவுப் பண்டமாகும்

. அல்வா என்றசொல், அரேபிய மொழியில் இருந்து வந்ததாகும். இப்படி பட்ட அல்வா தென் இந்தியாவில் உள்ள திருநெல்வேலி அல்வா மிகபிரபலம்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜமீன்தார் ஒருவர் வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் பொழுது இந்த அல்வாவைமுதன் முதலாக ருசித்துள்ளார்.

அதன் சுவைக்கு அடிமை ஆன அவர் அந்த அல்வா தயாரித்தவரை தன்னுடனே அழைத்து வந்துவிட்டார். அவர் மூலம் திருநெல்வேலிக்கு அல்வா தயாரிப்பு அறிமுகம் ஆனது.

ஆனால் அவர் அங்கு தயாரித்த அல்வாவை விட திருநெல்வேலியில் தயாரித்த அல்வா அதை விடவும் ருசி அதிகமாகஇருந்தது. இன்றளவும் இந்த அல்வாவின் ருசிக்கு தாமிரபரணி ஆற்று தண்ணி தான் காரணம் என்றும் பரவலாக பேசப்படுகிறது.

நெல்லையில் நூறு வருடங்களுக்கு மேலாக இந்த அல்வாவிற்கு பெயர் பெற்ற ஒரே கடை திருநெல்வேலி இருட்டுக்கடை. இந்த கடையில் ஆரம்ப காலத்தில் இருந்து ஒரே ஒரு விளக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர்,

இதனால் இந்த கடைக்கு இருட்டுகடை என்று பெயர் வந்தது. இன்றளவும் இவர்கள் வெறும் சாதாரண பல்பு ஒன்றை மட்டுமே பயன்படுத்தி விற்பனைசெய்கிறார்கள்.

இருட்டுக்கடை அல்வா விற்பனை மற்ற கடைகளை போல முழு நேர விற்பனை கிடையாது. மாலை 6 மணிக்கு விற்பனைதொடங்கும் முன் 4 மணி முதலே மக்கள் வரிசையில் நிற்க தொடங்கி விடுவார்கள். அதிகபட்சம் 8 அல்லது 9 மணி வரைமட்டுமே விற்பனை நடைபெறும்.