கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் மற்றும் சுல்தான் பந்தேரி பகுதியின் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்தவர் ஓ.என்.ஜார்ஜ்.
இவர் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னதாக அப்பகுதிக்கு உட்பட்ட 15 வயதுடைய பழங்குடியின சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும்., அந்த சிறுமியை தொடர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த சிறுமி கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாயார் விஷயம் குறித்து ஓ.என்.ஜார்ஜை சந்தித்து முறையிட்டுள்ளார்.
இதனை கேட்ட அவர் பணம் தனது அவர்களை சமரசம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
இந்த வழக்குப்பதிவை அறிந்த ஓ.என்.ஜார்ஜ் தலைமறைவாகியுள்ளதால் அவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும்., கேரள மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதிப்படைந்த சிறுமி அங்குள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.