கணவனை காப்பாற்ற சாமியாரிடம் சென்ற மனைவி! சில்மிஷத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் கணவனை காப்பாற்றுவதற்காக, சாமியாரை நம்பி சென்ற இளம் பெண் இறுதியில் அந்த சாமியாரால் பாலிய தொல்லைக்குள்ளாகியுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரப்பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் இருக்கும் Jaggayyapeta பகுதியைச் சேர்ந்தவர் Bilal.

சாமியாரான இவரிடம் திருமணமான பெண் ஒருவர், தன் கணவரின் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது.

அவரை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். உடனே பிலால் ஒரு சில பூஜை செய்தால், கணவனை காப்பாற்றிவிடலாம் என்று முதலில் நம்பும் படி சில வார்த்தைகள் கூறினார்.

அதன் பின் சில நாட்கள் கழித்து அந்த பெண்ணை தொடர்பு கொண்ட சாமியார், கணவரை காப்பாற்ற பூஜை செய்ய வேண்டும் என்பதால் பூஜை செய்யும் இடத்திற்கு வரும் படி கூறியுள்ளார்,

கணவரை காப்பாற்றி ஆக வேண்டும் என்று எண்ணத்தில் இருந்த அவரும் அழைத்தவுடன் சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் சாமியார் அறை உள்ளே அழைத்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறி, கதவை அடைத்துள்ளார்,

அதன் பின் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக இது குறித்து மொபைல் போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அங்கு வந்த உறவினர்கள் பெண்ணை மீட்டு, சாமியாரை பொலிசாரிடம் பிடித்து கொடுத்தனர்.

பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.