IVF அல்லது ICSI எனப்படும் சிகிச்சை முறைகள் இனப்பெருக்க உயர் சிகிச்சை முறைகளாகும். பெண்ணின் கருவும் ஆணின் விந்தணுவையும் உடம்பிற்கு வெளியில் கருத்தரிக்கச் செய்து உடம்பினுள் வளர்வதற்காக பெண்ணின் கருப்பையில் இடப்படுகின்றன. அவ்வாறு கருவுறுதல் வெளியில் நடைபெறுவதால் அவை டெஸ்ட் டியூப் குழந்தைகள் என அழைக்கப்படுகின்றன.
IVF அல்லது ICSI எனப்படும் இனப்பெருக்க உயர் சிகிச்சைகளை உடனே ஆரம்பிக்க கூடாது. IVF சிகிச்சையை எடுத்தவுடனேயே தொடங்காமல் மற்ற சிகிச்சை முறைகள் அனைத்தும் பயன்தராத நிலையில் இதனைப் பயன்படுத்தலாம்
குழந்தையின்மை சிகிச்சையில் மருத்துவத்துறையின் அபார வளர்ச்சி தான் டெஸ்ட் டியூப் குழந்தை முறை ஆகும். இதற்காக பல கரு முட்டைகளை எடுத்து ஆணின் விந்தணுவில் துடிப்பாக உள்ள அணுக்கள் தெரிவு செய்யப்பட்டு பெண்ணின் கருப்பைக்குள் இடப்படுகின்றன.
இம்முறையில் பிறக்கும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை போன்றே சாதாரணமாகப் பிறக்கும். எந்த ஒரு குழந்தையைப் போலவும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.