தடுமாறும் நேரத்தில் ரயில் வந்தால் என்ன ஆவது..?

நாகை மாவட்டம், கொள்ளிடத்திலிருந்து மாங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம், நல்லூர் வழியாகப் பழையாறு மீன்பிடிதுறைமுகத்துக்குச் செல்லும் நெடுஞ் சாலையின் குறுக்கே கொள்ளிடம் ரயில்நிலையம் அருகே இருப்பு பாதை செல்கிறது.

ரயில் வரும் நேரங்களில் திறந்துமூடும் வகையில் கேட் அமைக்கப்பட்டு எந்நேரமும் கேட் கீப்பர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

கொள்ளிடத்திலிருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்வோர்களும் பழையாறு மீன்பிடி துறைமுகத்துக்குச் செல்வோர்களும் இந்த ரயில் பாதையைக் கடந்து தான்செல்ல வேண்டும்.

இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரைஅனைத்து வகையான வாகனங்களும் இந்தப் பாதையைக் கடந்து தான் செல்லவேண்டும்.

சிதம்பரம் மற்றும் சீர்காழிபகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் தினந்தோறும் இந்தப் பாதையைக் கடந்து தான் சென்று வருகின்றனர்.

சீர்காழி மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளிலிருந்து கொள்ளிடம் வழியாகமகேந்திரப்பள்ளிக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், புதுப்பட்டினம் மற்றும் பழையாறு துறைமுகத்துக்குச் செல்லும் பேருந்துகளும் இந்த ரயில் பாதையைக் கடந்து தான்செல்ல வேண்டும். தொடர்ந்து இவ்வழியாக வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயில்வே ஊழியர்கள், இருப்பு பாதையைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்ட போது, இருப்பு பாதைக்குஇடைப்பட்ட பகுதியில் உள்ள சாலை பகுதியை மேம்படுத்தாமலும் சரி செய்யாமலும் விட்டு விட்டனர்.

இதனால்இந்தச் சாலை மேடு பள்ளமாகவும் உள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர்களில் பலர் விழுந்துகாயத்துடன் செல்கின்றனர்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி இருப்பு பாதை அமைந்துள்ள சாலைப் பகுதியை ரயில்வே நிர்வாகம்மேம்படுத்த உடனடியாக நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.