புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மேரி உழவர் கரையில் சாலையோரமாக வீடு ஒன்று அமைந்துள்ளது. இந்த வீட்டின் குளியல் அறையானது சாலையை ஒட்டியபடி அமைந்துள்ளது.
இந்த இடத்திற்கு இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வருகை தந்த நபர்., வாகனத்தை குளியல் அறையின் அருகில் அமைதியாக நிறுத்தி விட்டு., குளியல் அறையின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளார்.
அந்த நேரத்தில்., அந்த வீட்டில் இருந்த பெண் குளித்துக்கொண்டு இருந்ததை கவனித்த அவரை அந்த சாலையின் வழியாக சென்ற நபர்கள் கவனிக்கவே., கூச்சலிட்டுள்ளனர்.
இதனை கவனித்த அவர்., உடனடியாக இருசக்கர வாகனத்தை இயக்கியபடி சிட்டாக பறந்துள்ளார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை துரத்தவே., வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்த காரணத்தால் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.
இதனை கவனித்த அவர்கள் வாலிபர் அகப்படாததை எண்ணி இருந்த நேரத்தில்., வாலிபர் பெட்ரோல் வாங்கி கொண்டு சம்பவ இடத்தில் யாரும் இல்லை என்று நினைத்து வாகனத்தை எடுத்து செல்ல வந்துள்ளார்.
அந்த நேரத்தில் அங்கு மறைந்திருந்த இளைஞர்கள் மற்றும் கிராமமக்கள் அவரை பிடித்து சரமாரியாக உதைத்து ரெட்டியார்பாளையத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் அந்த நபரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.