திருவண்ணாமலை நகரம் கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமம் எதிரே ஆந்திரா ஆஸ்ரமம் அருகில் அமர்ந்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கைாயஸ்ரமபீடாதிபதி யோகீஸ்வரர் சுவாமி என்பவர் நிர்வாண பூஜை நடத்தியுள்ளார்.
இந்த செய்தி வெளியானதையடுத்து காலை 11 மணிக்கு வந்த வருவாய்த்துறை கோட்டாச்சியர், தாசில்தார், நகர காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான பொலிஸ் படை நிர்வாண பூஜை நடத்தக்கூடாது, உடனே அதனை நிறுத்தாவிட்டால் கைது செய்வோம் என எச்சரித்தனர்.
பொலிஸ் யார் எங்களை வந்து கேள்வி கேட்க, நிர்வாண பூஜை நடத்தக்கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யார் என தெலுங்கில் சரமாரியாக பேசியவரிடம், நிர்வாண பூஜை என்பதைக் கேட்டு மக்கள் முகம் சுளிக்கறாங்க, சாதாரண பூஜையை நாங்கள் தடுக்கப்போவதில்லை என எடுத்துச்சொல்லியும் அவர்கள் கேட்காமல் தகராறு செய்தனர்.
மேலும், திருப்பதிக்கு வருகிற தமிழர்களை அடிச்சி துரத்தனால், எங்க மேல ஒரு பயம் வரும் என்று சாமியார் கூறியதையடுத்து பொலிசாருக்கு கோபம் வந்துள்ளது,
தமிழ்நாட்டுக்காரன் வரலன்னா, திருப்பதியில ஒன்னும்மேயில்ல என சாமியாரிடம் தெரிவித்த அவர்கள், சுமார் 2 மணிநேர வாக்குவாதத்திற்கு பின்னர் சாமியாரை வெளியேற்றினர்.