மேற்கு மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை!! மற்ற இடங்களில் நிகழவிருக்கும் மாற்றம்!

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்து வரும் 24 மணி நேரங்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்க்கு மழையை கொடுக்கவில்லை. இருப்ப்பினும், புயல்கள் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகப்படியான மழையினை காணமுடிந்தது. தென் மாவட்டங்களையும் இது விட்டுவைக்கவில்லை.

ஆனால், அதற்கு பின்னர் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் கடுமையான குளிர் மக்களை வாட்டியது. நாடு முழுவதுமே இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பனி அதிகம் இருந்ததை உணர இயலும். இதன் காரணமாக கொடைக்கானலில் கடந்த மாதம் குளிர் மைனஸ் டிகிரியை தொட்டது.

இந்நிலையில்எதிர்பாராத நிகழ்வாக இன்னும் 24 மணிநேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், தமிழகம் மற்றும் கர்நாடக பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசைக்காற்றும் நிலவுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அறிவித்துள்ளனர்.

இதனால், மேற்கு மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், மேலும், மற்ற அனைத்து பகுதிகளிலும் கடுமையான பனி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் விடியற்காலையில் மூடுபனி நிலவகைகூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதே போல் நேற்றிரவில் இருந்து பனி வழக்கத்தை விட அதிகமாக காணப்படுவதும், வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதும் நடக்கினறது.