ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை வென்று உற்சாகத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்று வென்று கைப்பற்றியுள்ளது இந்தியா. இந்தநிலையில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.
இந்திய அணியில் அறிமுக வீரர் சுபம் கில் இந்த போட்டியில் களமிறங்குகிறார். தோனிக்கு மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த 2 போட்டிகளிலும் இருந்து இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்படுவதாகவும் அவருக்கு பதில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
மேலும் காயம் காரணமாக சென்ற ஆட்டத்தில் ஆடாத தோனிக்கு மீண்டும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவரது இடத்தில் இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக மீண்டும் களமிறங்குகிறார். மேலும் வேகப்பந்துவீச்சாளர் முகமது சாமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கலீல் அஹ்மத் இந்த போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
துவக்க மட்டையாளர்களாக களம் இறங்கிய ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா 13 மற்றும் 7 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனை தொடர்ந்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்து இந்திய அணி 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறி ஆடிவருகிறது. 14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது.