திருமணத்துக்கு இரு வாரமே உள்ள நிலையில் ரஜினியின் மகள் வெளியிட்ட தகவல்

பொன்னியின் செல்வன் நாவலை வெப் சீரிஸாக உருவாக்க இருப்பதாக ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா, அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரை விவாகரத்து செய்தார்.

இதையடுத்து நடிகரும், தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி என்பவரை அடுத்த மாதம் 11-ஆம் திகதி சவுந்தர்யா மறுமணம் செய்கிறார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை வெப் சீரிஸாக உருவாக்க இருப்பதாக சவுந்தர்யா அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், இது எனது கனவு திட்டம்! இந்த விஷயத்தை வெளிப்படுத்துவதில் அளவற்ற மகிழ்ச்சி. இதற்காக மே 6 எண்டர்டெயிண்ட்மெண்ட் மற்றும் எம் எக்ஸ் பிளேயர் ஆகியோருடன் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்.

வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் எம் எக்ஸ் ஒரிஜினல் வெப் சீரிஸாக வெளியாகப் போகிறது. இந்த வலைத்தொடர் தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரச பரம்பரையின் ஆட்சிக்காலத்தைப் பற்றிய விறுவிறுப்பும், வீரமும், தொன்மையும், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த காவியமாக இருக்கும்.

கடவுள் எங்களை ஆசிர்வதிக்கட்டும், உங்கள் ஆதரவு தேவை என பதிவிட்டுள்ளார்.