கேரள மாநிலத்தில் உள்ள குமுளிக்கு அருகில் பகுதியை சார்ந்த 16 வயதுடைய சிறுமி தனது வீட்டில் இருந்து மயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து குமுளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில்., அவர் கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தை சார்ந்த மேலுகாவ் பகுதியை சார்ந்த அப்பு (24) என்ற வாலிபரை காதலித்து வந்தது தெரியவந்தது.
இதனை அறிந்த காவல் துறையினர் அப்புவின் இல்லத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., அப்பு இல்லத்தில் இல்லாததை அறிந்த காவல் துறையினர்., சிறுமியின் அலைபேசி எண்ணை ஆய்வு செய்து., அந்த அலைபேசி எண் தற்போது எங்கு உள்ளது என்பது குறித்த விசாரணையில் ஈடுபட துவங்கினர். அந்த ஆய்வில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பூஞ்சிறா வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனை அறிந்த காவல் துறையினர்., அங்குள்ள பொதுமக்களின் துணையுடன் இவர்கள் இருவரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்., வனப்பகுதி தொடுபுழா – புளியன்மலை பகுதிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் அப்பு மற்றும் அந்த சிறுமியை கண்டுள்ளனர். காவல் துறையினரை கண்டு கொண்ட இவர்கள் மீண்டும் காட்டுப்பகுதிக்குள் தப்பியோடியுள்ளனர்.
இவர்களை அங்குள்ள பகுதி மக்களின் துணையுடன் பிடித்த காவல் துறையினர்., குமுளி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து இவர்கள் இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., குமுளிக்கு சுற்றுலா வந்திருந்த அப்புவுக்கும் சிறுமிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறியுள்ளது.
இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த 23 வருடங்களுக்கு முன்னதாக வீட்டை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்ற இவர்கள்., உணவு சமைக்க தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து சென்று., அங்கு வைத்து கிடைத்த இடங்களில் படுத்துறங்கி., இருந்து வந்துள்ளனர். இந்நிலையில்., இவர்களின் சமையல் பொருட்கள் அனைத்தும் தீர்ந்து போனதால்., இளநீர் மற்றும் மாங்காயை உண்டு இருந்து வந்த பின்னர்., வனப்பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்துள்ளனர்.
அப்புவிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட போது., பல பெண்களை காதல் என்ற வலையில் விழ வைத்து., அவர்களை மலைப்பகுதிக்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்து பின்னர் அவர்கள் உடனான தொடர்பை கைவிடும் வழக்கத்தை வைத்துள்ளார். மேலும்., கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக இளம்பெண் ஒருவரை கடத்தி கொண்டு வந்து அவரை கற்பழித்த வழக்கும் இருந்து வரும் நீலயில்., இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய அப்பு., 23 நாட்களாக வனத்தில் இருந்து பின்னர் வெளியே வந்த போது கைது செய்யப்பட்டார். இது குறித்து அவர் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். மேலும்., அந்த பெண்ணை மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின்னர்., பெற்றோர்களிடம் சிறுமியை ஒப்படைத்த காவல் துறையினரிடம்., சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை அழைத்து செல்ல மறுத்ததால்., அவரை அங்குள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
இளம் வயதில் ஏற்படும் காதல் என்ற மாயையை பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு உரிய முறையில் எடுத்துரைத்து., அவர்களின் எதிர்காலத்தை சிந்தித்து செயல்பட வேண்டும்., அந்த சிறுமியின் வாழ்க்கை ?????