கொண்டாட்டத்தில் மோடி.!! அதிர்ச்சியில் காங்கிரஸ்.!!

கடந்த திங்கட்கிழமை அரியானா மாநிலத்தின் ஜிந்த் தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், அம்மாநிலத்தில் ஆளுங்கட்சியான் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

அரியானா மாநிலம் ஜிந்த் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த திங்கட்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அம்மாநில ஆளும் கட்சியான பாஜக சார்பில் கிருஷண் லால் மித்தா என்பவர் நிறுத்தப்பட்டு இருந்தார்.

அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜித் வாலா நிறுத்தப்பட்டார். ஜனநாயக ஜனதா கட்சி சார்பில் திக்விஜய் சவுதாலா நிறுத்தப்பட்டிருந்தார். அன்று நடந்த வாக்குப்பதிவில் 76 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று காலை இந்த இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அர்ஜுன் ஸ்டேடியத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட கிருஷண் லால் மித்தா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக வெற்றி பெறுவதற்காக பெறுவதற்கு காரணமாக இருந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ”ஹரியானாவில் பாஜக வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கு நன்றி. பாஜக வாக்குறுதி அளித்தபடி இந்த தொகுதியில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களுக்கு சேவையாற்றும் அரியானா முதலமைச்சர் அவர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இந்த பதிவில் தெரிவித்துள்ளார்.