தந்தை இறந்து 9 மாதத்தில் இளம்பெண்ணுக்கு ஜவுளி கடை உரிமையாளர் அரங்கேறிய அட்டூழியம்..!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் 21 வயது பெண் கூட்டு வல்லுறவு வன்கொடுமையால் கடந்தநவ.7ம் தேதி ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தந்தை இறந்து ஒன்பது மாதமே ஆன நிலையில் அந்தப் பெண் தாயாருடன் வசித்து வந்த நிலையில் இக்கொடூரச் சம்பவம் நடந்தது.

இதுகுறித்த புகாரில் திருவிடைமருதூர் காவல்துறையினர், திருபுவனம் காத்தாயி அம்மன் தெருவை சேர்ந்த சின்னப்பா (43), மைதீனை கைதுசெய்தனர்.

மேலும் மற்ற குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தயக்கம் காட்டியதாலும். இக்கொடிய செயலுக்கு பின்னால்கூட்டான கயமைத்தனம் உள்ளது என சந்தேகம் எழுந்த நிலையில் இவ்வழக்கை உரிய முறையில் விசாரித்து குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு அரசு வேலை வழங்கி நிவாரணம் மற்றும் உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என அனைத்து அரசியல்கட்சியினர் மற்றும் மாதர் சங்கம் இணைந்து பல கட்ட போராட்டம் தன்னெழுச்சியாக நடைபெற்றது.

மேலும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரபட்டது. வழக்கை விசாரித்தஉயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண் சம்பந்தபட்ட குற்றவாளிகளை உடன் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி உரிய பாதுகாப்புவழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து பாலியல் வழக்கில் நீண்ட நாளாக தேடப்பட்ட திருபுவனம் சன்னதி தெருவைச் சேர்ந்த ஜவுளி கடை உரிமையாளரும் சேகர் மகன் கார்த்தி என்பவரை ஞாயிறு நள்ளிரவு தனிபடையினர் சென்னையில் பதுங்கி இருந்த போது கைது செய்தனர்.