இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்செயா தனது பந்துவீச்சை மறுமதிப்பீடு செய்யும் சோதனைக்காக இன்று சென்னை வரவுள்ளார்.
25 வயதாகும் தனஞ்செயாவின் பந்து வீசும் முறை சந்தேகத்துக்கு இடமளிக்கும் விதமாக இருப்பதாக கடந்தாண்டு இங்கிலாந்து – இலங்கை போட்டியின் போது புகார் அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் தனஞ்செயா பந்துவீச ஐசிசி கடந்த டிசம்பர் மாதம் தடை விதித்தது.
இதையடுத்து அவரின் பந்துவீச்சு முறையை மறுமதிப்பீடு செய்யும் சோதனை சென்னையில் உள்ள Center for Sports Science (CSS) -ல் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக இன்று காலை தனஞ்செயா சென்னைக்கு வரவுள்ளார்.