பிரபல திரைப்பட நடிகையான பானுப்பிரியா மீது வேலைக்கார பெண் ஒருவர் புகார் கொடுத்திருந்த நிலையில், பொலிசார் அவரின் வீட்டில் நகை மற்றும் பணங்களை திருடியதாக கூறி வேலைக்கார பெண்ணின் மகள் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை பானுப்பிரியா. இவர் சென்னை தி.நகரில் விஜயநகர சாலையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 19-ஆம் திகதி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பானுப்பிரியா மற்றும் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் புகார் ஒன்றை அளித்தனர்.
அதில், கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆந்திரவைச் சேர்ந்த 16 சிறுமி ஒருவரை தெரிந்தவர்கள் உதவியுடன் எனது வீட்டில் வேலைக்கு சேர்த்தோம்.
பணிக்கு சேர்ந்த இரண்டு மாதத்தில் அவரது தாயார் பார்வதி சிறுமியை பார்க்க எங்கள் வீட்டிற்கு வந்து சென்றார்.
அவர் வந்து சென்ற பிறகு எங்கள் வீட்டில் இருந்த 10 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு ஐபேட், ஒரு கேமரா, 2 வாட்ச் உள்ளிட்ட பொருட்களை காணவில்லை.
இந்நிலையில் மீண்டும் தனது மகளை பார்க்க வந்த பார்வதியிடம் இது குறித்து கேட்டோம். அப்போது அவர் தனது மகள்தான் நகை மற்றும் பணத்தை எடுத்து தன்னிடம் கொடுத்தாக தெரிவித்தார்.
நகைகள் மற்றும் பணம் ஆந்திராவில் இருப்பதாக கூறி, அவற்றை கொண்டு வந்து திருப்பி கொடுத்துவிடுகிறேன், அதன் பின் என் மகளை அழைத்து செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.
ஆனால் அவர் திரும்பி வரவில்லை. இதனால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து நகைகளை மீட்டுத் தரும்படி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த வேலைக்கார பெண், பானுப்பிரியா தன்னுடைய மகளை சித்ரவதை செய்வதாக, ஆந்திரா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் பின் அவர் வீட்டிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பானுப்பிரியா இப்படி ஒரு புகாரை கொடுத்துள்ளதால், பொலிசார் அந்த சிறுமி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.