திடீரெனத் தீப்பற்றியெரிந்த கார்….!! நள்ளிரவில் விபரீதம்…!!

வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரெனத் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் யாழ். வல்வெட்டித்துறை தெணியம்மை பகுதியில் நேற்றைய தினம்(01)இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,வீட்டிலிருந்த காரின் உரிமையாளர் உறக்கத்திலிருந்த சமயத்திலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட வெளிச்சத்தையடுத்துக் கண் விழித்த காரின் உரிமையாளர் வீட்டுக்கு வெளியே தீப்பற்றி எரிந்த தனது காரை தண்ணீர் கொண்டு அணைப்பதற்கு முயற்சித்துள்ளார். எனினும், அதற்கிடையே காரின் ஒரு பகுதி நாசமாகியுள்ளது.இதேவேளை,எரியுண்ட மேற்படி காரின் பெறுமதி 33 இலட்சம் ரூபா எனத் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித் துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தச் சம்பவம் திட்டமிட்ட ரீதியில் இடம்பெற்றிருக்கலாமெனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.