அனில் அம்பானியின் நிறுவனம் திவால்!

அம்பானி சகோதரர்களில், முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் தன்னை திவால் ஆனதாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானிக்கு சொந்தமானது ரிலையன்ஸ் நிறுவனம்.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் கம்யூனிகேசன் பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்காக, கம்பெனிக்கு சொந்தமான சொத்துகளை விற்க கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி முடிவு செய்யப்பட்டது. ஆனால் இன்றுவரை சொத்துகளை விற்க முடியாததால் கடன் கொடுத்தவர்களுக்கு தொகை திருப்பி செலுத்த முடியவில்லை.

இதன்காரணமாக கம்பெனியின் இயக்குனர்கள் ஆலோசனை குழு நேற்று நடைபெற்றது. அதில், கம்பெனியை திவால் ஆனதாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.