தூத்துக்குடி அய்யர்விளையைச் சேர்ந்தவர் அந்தோணி (48). இவர் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்து மகளுடன் வசித்து வந்த விதவை பெண்ணை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
இதனையடுத்து அந்த விதவை பெண் தனது 14 வயது மகளுடன் அந்தோணியின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். அந்த பெனின் மகள் அவர்கள் வீட்டின் அருகிலிருந்த பள்ளியில் படித்துவந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத நேரங்களில் அந்தோணி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
அந்தோணியின் பாலியல் தொல்லையை சிறுமி அவரின் தாயிடம் கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த தாய் அந்தோணி மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்தோணியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தந்தை ஸ்தானத்தில் இருந்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது