உடுமலைபேட்டையை சேர்ந்த சங்கர் என்பவரை, கடந்த 2016ம் ஆண்டு கவுசல்யா தனது பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். எனவே, கவுசல்யாவின் கணவர் சங்கரை வெட்டிக் கொன்றனர், கவுசல்யாவையும் வெட்டியுள்ளனர்.
ஆனால், காயங்களுடன் உயிர்த்தப்பிய கவுசல்யா. பின்னர், கனவரை இழந்ததனால் அவரது கொலைக்கு காரணமான தனது உறவினர் மற்றும் தந்தைக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்.
சங்கர் கொலை செய்யப்பட்டதையடுத்து குடிசை வீடாக இருந்த அவரது வீடு பசுமை வீடு கட்டும் திட்டத்தில் கட்டி கொடுக்கப்பட்டது. சங்கரின் தந்தைக்கு அரசு வேலை வழங்கினார். கவுசல்யாவுக்கு குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்டில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.
மேலும், கோவை வெள்ளலூரை சேர்ந்த பறை இசை கலைஞர் சக்தி என்ற வாலிபரை கவுசல்யா மறுமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கவுசல்யா இந்திய இறையாண்மைக்காக எதிராக பேசி உள்ளார். இதனைத்தொடர்ந்து கவுசல்யாவை சஸ்பெண்டு செய்து கன்டோண்மென்ட் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.