இந்தியா vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி தொடந்து வெற்றி பெற்றது.
கடைசியாக நடந்த 4வது ஒருநாள் போட்டியில் 92 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது, இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதற்கு பழிவாங்கும் வண்ணம் நாளை நடைபெற உள்ள 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக கடைசி 2 போட்டிகளில் விளையாடாமல் இருந்த தல தோனி நாளைய போட்டியில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளைய போட்டியில் தினேஷ் கார்த்திக்கு அணியில் இடம் இல்லை.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், சுபமன் கில், அம்பத்தி ராயுடு,தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்குமார்.