விதிகளை மீறிய கூகுள் நிறுவனம்.!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் கூகுளின் மூலம் நாள் ஒன்றிற்கு பில்லியனுக்கும் மேலான தேடல்கள் கையாளப்பட்டு வருகிறது. மேலும் அதன் மூலம் பல சட்டவிரோதமான தகவல்களை பெறுவதாகவும் பல சர்ச்சைகள் எழுந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் செயல்படக்கூடாது என ரஷியாவில்அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியது.

ஆனால் அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ‘கூகுள்’ தேடுபொறி நிறுவனம் பின்பற்றவில்லை எனவும்,பல சமூக விரோத தகவல்களை கொண்ட தேடுதளங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் ரஷ்யாவின் சட்ட விதிகளை மீறியதற்காக ‘கூகுள்’ நிறுவனத்துக்கு 7 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.54 லட்சத்து 21 ஆயிரத்து 80 அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கூகுள் நிறுவனம் அபராத தொகையை செலுத்தி விட்டதாக ரஷிய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளது.