திடீரென உயிரிழந்த தமிழர்: மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை…

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் பணிபுரிந்த சென்னையை சேர்ந்த நபர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவர் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக நிதி வசூலிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராம் சுந்தரம் (42) என்பவர் அமெரிக்காவில் தனது மனைவி சரண்யா சேகர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

ஐடி துறையில் பணிபுரிந்த ஸ்ரீராம் கடந்த மாதம் 17ஆம் திகதி அங்குள்ள பல்பொருள் அங்காடிக்கு சென்ற போது டிரக் லொறி அவர் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ஸ்ரீராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஸ்ரீராமின் திடீர் மரணம் அவர் மனைவி மற்றும் பிள்ளைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து அவர்களின் எதிர்காலத்துக்காக GoFundMe என்ற இணையதள பக்கம் மூலம் நிதி வசூலிக்கப்பட்டது.

$300,000 நிதி வசூல் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில் $370,000 நிதி வசூலாகியுள்ளது.

இதனிடையில் இந்தியாவுக்கு நிரந்திரமாக திரும்பும் நிலைக்கு ஸ்ரீராமின் மனைவி சரண்யா மற்றும் பிள்ளைகள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஸ்ரீராமின் இறுதிச்சடங்குகள் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில் இதன் பின்னர் மீண்டும் அவர்கள் அமெரிக்காவுக்கு திரும்ப மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.

ஸ்ரீராம் குடும்பத்துக்காக வசூல் செய்யப்பட்ட பணம் குறைந்த ஆபத்துகள் உள்ள முதலீட்டில் போடப்படவுள்ளது.

இதுபின்னர் ஸ்ரீராமின் பிள்ளைகளின் கல்வி செலவுக்கும், அவர் குடும்பத்தின் அத்தியாவசிய செலவுக்கும் பயன்படுத்தப்படும்.

இதோடு ஸ்ரீராம் மனைவி சரண்யா வேலை விடயமாக எடுக்கும் பயிற்சிக்கும் அந்த பணம் செலவிடப்படும் என தெரியவந்துள்ளது.