ராஜ குடும்ப நடவடிக்கைகளை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த இளவரசர் சார்லஸ் டயானா விவாகரத்து சம்பவமே இன்னும் பிரித்தானியர்கள் பலரது மனதிலிருந்து நீங்காத நிலையில், ராஜ குடும்பத்தில் இன்னொரு விவாகரத்து நடந்துள்ளது இளவரசர் சார்லஸ், அவரது இந்நாள் மனைவி கமீலா உட்பட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
ராஜ குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவரான Lord Halifaxஇன் மகனான James Irwin தனது மனைவியாகிய Georgiaவை விவாகரத்து செய்துள்ளார்.
James Irwinக்கு இளவசர் சார்லசின் மனைவியான கமீலா ஞானத்தாய் ஆவார். சார்லசும் கமீலாவும் அடிக்கடி James தம்பதியரை முக்கிய நிகழ்வுகளுக்கு அழைப்பதுண்டு.
Jamesக்கும் Georgiaவுக்கும் 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இரண்டு சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
James வீட்டில்தான் சார்லஸ் தனது மனைவியான இளவரசி டயானாவுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக கமீலாவை சந்திப்பாராம்.
James ஏற்கனவே தனது வங்கி வேலையை விட்டு விட்டு, பிளம்பர் வேலையைத் தேர்ந்தெடுத்ததற்காக பிரித்தானியப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானது குறிப்பிடத்தக்கது.