எப்போதும் இளமையாக இருக்கனுமா ?

பொதுவாக பெண்களுக்கு 30 வயது தாண்டினாலே முகம் சுருங்கி வயதான தோற்றத்தை காட்டி கொடுத்துவிடுகின்றது.

நம் சருமம் வயதானது போல் தோற்றம் தருவதற்கு முக்கிய காரணம் சரும தொய்வுதான். அதுமட்டுமின்றி இதற்கு இன்னொரு காரணம் கெமிக்கல் கலந்த க்ரீம், மேக்கப் ஆகியவற்றை உபயோகிப்பது தான்.

இதற்கு நாம் இயற்கை முறையினை கையாளுவதே சிறந்தது. இதற்கு சிறந்த பொருளாக வேக வைத்த சாதம் காணப்படுகின்றது. இது சருமத்தை இறுகச் செய்யும் ஆற்றல் கொண்டது. இவை சருமத் துவாரங்களையும் சுருங்க வைக்கும்.

தேன் சுருக்கங்களை குறைக்கும். பொலிவாக காண்பிக்கும். பால் அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்கி, சுத்தப்படுத்திவிடும். தற்போது இதனை வைத்து முகத்தை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • வெந்த சாதம் – கால் கப்
  • தேன் – 2 ஸ்பூன்
  • பால் – கால் கப்
செய்முறை

சாதத்தில், தேன் பால் கலந்து மிக்ஸியில் நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். பிரகு இதனை முகத்தில் மாஸ்க் போலத் தடவி, காய விடுங்கள்.

20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

முகத்தில் அப்போதே மாற்றங்கள் தெரியும். வாரம் மூன்று முறை செய்தால், சருமம் இறுகி, சுருக்கங்கள் மரைந்து, இளமையோடு காட்சியளிப்பீர்கள். வீட்டில் நீங்களும் செய்து பாருங்கள்.