தெலுங்கானாவில் காதல் கணவரை ஆணவக்கொலையில் இழந்த அம்ருதா நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.
அதற்கு காரணம், திருமணம் நடைபெற்ற நாளன்று இறந்துபோன தனது கணவனே மகனாக வந்து பிறந்ததுதான்.
தாழ்ந்த சாதி நபரான பிரனய் என்பவரை அம்ருதா காதல் திருமணம் செய்துகொண்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அம்ருதாவின் தந்தை மாருதிராவ், கணவர் பிரனய்யை ஆணவக்கொலை செய்தார்.
அவர் கணவர் பிரனய் குமார் கொல்லப்படும்போது அம்ருதா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டே அன்றே, ஆண் குழந்தை பிறந்துள்ளதால், மகிழ்ச்சியில் இருக்கும் அம்ருதா தனது பேஸ்புக் பக்கத்தில், தனது கணவர் புகைப்படத்திற்கு அருகில் நின்று பிறந்த குழந்தையுடன் புகைப்படம் எடுத்து பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.