மகனை நரபலிக்கு நாள் குறித்த மந்திரவாதி!

இந்திய மாநிலம் பீகாரில் கடவுளின் கோபத்தை தணிக்க நரபலிக்கு அனுமதி கோரி மந்திரவாதி ஒருவர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கடிதத்தில் நரபலி குற்றமல்ல எனவும், இதற்கு முன்னரும் நரபலி அளித்துள்ளதாகவும் அந்த மந்திரவாதி குறிப்பிட்டுள்ளார்.

சுரேந்திர பிரசாத் சிங் என்ற மந்திரவாதியே கடவுளின் கோபத்தை தணிக்க நரபலிக்கு அனுமதி கோரியுள்ளவர்.

பொறியியல் பட்டதாரியான மகனை கடவுளுக்கு சமர்ப்பிக்க இருப்பதாகவும், இதனாலையே கடவுளின் கோபம் தணியும் எனவும் அந்த நபர் குறித்த கடிதத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

மந்திரவாதியின் இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில்,

பொலிசார் தங்களுக்கு இதுபோன்ற கடிதம் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் இது முக்கிய விடயம் எனவும், உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நரபலி வேள்விகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இது அனுமதிப்பது குற்றம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே குறித்த மந்திரவாதி தொடர்பில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் குடியிருக்கும் ஃபகத்பூர் கிராம மக்கள் அவரை பித்துப்பிடித்த மந்திரவாதி என்றே அழைத்து வந்துள்ளனர்.

வாரத்தில் பல நாள் நிர்வாணமாக கிராம வீதிகளில் அவர் வலம் வருவதாகவும், கையில் மண்டை ஓடு ஒன்றை வைத்திருப்பார் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.