தினமும் கோதுமையை உணவில் சேர்ப்பதனால் நன்மையா?

உலகளவில், மனித உணவில் தாவரப் புரதத்தின் முக்கிய மூலமாக கோதுமையே விளங்குகிறது.

தற்போது பெரும்பாலானோர் கோதுமையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைத் தான் அதிகம் சாப்பிடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இது உடலில் பல்வேறு நோய்களை அடியோடு அழிக்கும் சக்திப்படைத்தது.

கோதுமைப் புரதம் மாவடிவில் உள்ளதால் 99%மான மனிதர்களால் இலகுவாகச் சமிபாடடையச் செய்ய முடியும்.

மேலும் கோதுமையில் உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் மற்றும் கொழுப்பு ஆகியன உள்ளன. கோதுமை உணவுகள் மிகவும் சத்து மிக்கன.

இத்தகைய அற்புதம் நிறைந்த கோதுமை உடல் எடை இதய நோய் புற்றுநோய் போன்ற பிரச்சினைக்கு பெரிதும் உதவு புரிகின்றது. தற்போது இதன் அற்புத பயன்கள் பற்றி பார்ப்போம்.

  • தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.
  • பெரும்பாலானோருக்கு கோதுமைப் பொருட்களை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று தெரியும். இருப்பினும் உடல் எடையை குறைக்க நினைப்போர் மைதாவை தவிர்த்து, கோதுமையை சாப்பிடுவது மிகவும் நல்லது.
  • மைதாவை அதிகம் சாப்பிட்டால், செரிமான பிரச்சனை ஏற்படும். ஆனால் கோதுமையை சாப்பிட்டால், அது எளிதில் செரிமானமாகும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படாது.
  • இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.
  • கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. ஆகவே இதனை தவறாமல் கொஞ்சமாவது சாப்பிட்டு வாருங்கள்.
  • இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மைதா ரொட்டி சாப்பிடுவதை நிறுத்தி, கோதுமை ரொட்டியை சாப்பிடுங்கள். இது உயர் இரத்த அழுத்தம் ஏற்படாதவாறு பாதுகாக்கும்.
  • தைராய்டினால் அவஸ்தைப்படுபவர்கள் கோதுமையை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.
  • வாய் துர்நாற்றம் உள்ளவர்கள், கோதுமை உணவை அதிகம் சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். ஏனெனில் கோதுமையில் உள்ள குறிப்பிட்ட வைட்டமின்கள் வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.
  • எலும்பு அழற்சி உள்ளவர்கள் தினமும் டயட்டில் கோதுமை ரொட்டி அல்லது பிரட் சேர்த்து வந்தால், அது எலும்புகளில் ஏற்படும் அழற்சியைத் தடுக்கும்.
  • நீரிழிவு நோயாளிகள், இன்சுலின் சுரப்பை சீராக வைப்பதற்கு கோதுமையை உணவில் சேர்த்து வருவது நல்லது.
  • கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தியை சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றில் உள்ள பிரச்சனையை சரிசெய்து, மலச்சிக்கலில் இருந்து விடுதலைத் தரும்.
  • தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் சிறுநீரக கற்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
  • உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமானால், கோதுமை உணவுப் பொருட்களை உணவில் சேர்த்து வருவதனால் இது சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கக்கூடியவை.
  • கோதுமையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே பால் பிடிக்காதவர்கள், கோதுமை சப்பாத்தி அல்லது கோதுமை பிரட் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்து வாருங்கள்