ஆண்டிப்பட்டி சிங்கராஜபுரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகள் துர்காதேவி(20)க்கும், அய்யனார் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் அய்யனார் வேலை பார்த்து வருகிறார். இருவருக்குமிடையே ருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையி, இருவரும் கடந்த சில வருடங்களாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அய்யனார் வேறொரு பெண்ணுடன் பிடித்த புகைப்படத்தை காட்டி அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.
இதனால், மனம் உடைந்த துர்கா விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். துர்காவின் தந்தை குமார் அளித்த புகாரின் காரணமாக வழக்குபதிவு செய்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.