காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்ட்பட்ட காத்தான்குடி கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலம் இன்று(2) காலை 9.00 மணியளவில் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
65 வயது மதிக்கத்தக்க இப்பெண் கடலில் அலைகளால் அடித்துத் தள்ளப்பட்ட நிலையில் கடற்கரையோரம் சடலமாக மீட்கப்பட்டவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.