கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி பல அடுக்கு மாடி கட்டடங்களுடன் கட்டப்பட்ட உடுப்பி இன்டர்நேஷனல் ஹோட்டல், விடுதி, திருமணம் மண்டபம் உள்ளிட்டவைக்கு நகராட்சி, உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் சீல்வைத்தனர்.
குமரி மாவட்டம், நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட கட்டடங்கள் உரியஅனுமதி பெறாமலும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டது.
அதன்படி, குமரி மாவட்டம்முழுவதும் பல கட்டடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள்சீல் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், வடசேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல உடுப்பி இன்டர்நேஷனல் நிறுவனம், விடுதி, திருமண மண்டபம் ஆகிய கட்டடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.