நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகை என்று பெயர் பெற்றவர் நடிகை பானுப்பிரியா. இவர் சமீபத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்யராஜ் மனைவியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது பானுப்ரியா வீட்டில் பணியாற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி புகார் வந்துள்ளது. ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில். பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்க்கும் 15 வயது சிறுமிக்கு அவர் ஒராண்டிற்கும் மேலாக சம்பளம் கொடுக்கவில்லை எனவும், மேலும் பானுப்பிரியாவின் அண்ணன் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் அந்த சிறுமியின் தாயார் கூறியிருந்தார்.
இதனையடுத்து அந்த சிறுமிக்கு 14 வயதுதான் என்பதால், குழந்தையை வேலைக்கு அமர்த்தியதன் காரணத்தாலும், கொடுமைகள் செய்த காரணத்திற்காகவும் பானு ப்ரியாவும் அவரது சகதோரரும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் காவல் துறையினரால் கைதுசெய்யப்படலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் வீட்டில் நகை மற்றும் பணம் காணாமல் போனது குறித்து பானுப்ரியா தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் தனது மகள் பணத்தை திருடி தன்னிடம் கொடுத்ததாக சிறுமியின் தாயார் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சென்னை பாண்டிபஜார் போலீசார் சிறுமியையும், அவரது தாயாரையும் கைது செய்தனர். தற்போது சிறுமியின் தாயார் புழல் சிறையிலும், சிறுமி சென்னை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.