மதுரை மாவட்டத்தில் உள்ள மாரன்வாரிஏந்தல் கிராமத்திற்கு அருகில் உள்ள திருமால்புரத்தை சார்ந்தவர் திருமலைசாமி. இவரது மகனின் பெயர் கருப்பு என்ற இளஞ்செழியன் (29)., இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 2012 ம் வருடத்தின் போது., தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை அருகேயுள்ள மகிமாலை – அக்கறைப்படுகை கிராமத்தில் இருக்கும் ரேவதி (வயது 28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் நித்திஷ் என்கிற 5 வயதுடைய மகன் உள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் திருப்பூரில் வைத்து திருமணத்தை முடித்து விட்டு., அங்கேயே தங்கி பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில்., அம்மாபேட்டையை சார்ந்த இளங்கோவனின் மகன் இளவழகன் (வயது 24) என்பவர் இவருடைய நண்பர் என்பதால் அடிக்கடி இவர்களை வந்து சந்தித்து செல்லும் வழக்கத்தை வைத்துள்ளார். அந்த நேரத்தில்., ரேவதிக்கும் இளவழகனுக்கும் ஏற்பட்ட பழக்கமானது கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது.
இதனை அறிந்த இளஞ்செழியனுக்கும் – ரேவதிக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு., இவர்கள் இருவரும் தஞ்சாவூர் செல்ல முடிவு செய்து அதன் மூலமாக தஞ்சாவூரில் இருக்கும் வெட்டுக்காரன்தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளனர். இளவழகனுக்கும் – ரேவதிக்கும் இடையே இருந்த பழக்கமானது தஞ்சாவூரில் தொடர்ந்துள்ளது. இதனை அறிந்த இளஞ்செழியன் ஆத்திரமடைந்து மதுரையில் உள்ள தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில்., கடந்த ஜனவரி மாதத்தில் 2018 ம் வருடத்தில் பொங்கல் பண்டிகையன்று அலைபேசியில் தொடர்பு கொண்ட ரேவதி., மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்டு நம்பிக்கையுடன் தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அங்கிருந்த ரேவதியின் நண்பர் இளவழகன் மற்றும் அவருடைய நண்பர்கள் கலியபெருமாள் (வயது 21) ஆகியோர் மது அருந்தியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மது போதையில் இருந்த நேரத்தில்., மூவரும் சேர்ந்து இளஞ்செழியனை கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை ஆட்டோவின் மூலமாக வல்லம் அருகேயுள்ள வாய்க்கால் பாதையில் இருக்கும் குழாயின் உள்ளே பிணத்தை போட்டுள்ளனர். தனது மகன் பற்றிய விபரங்களை அறியாத தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்யவே., இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து ரேவதியிடம் விசாரணை மேற்கொண்ட சமயத்தில்., அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவிக்கவே அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காவல் துறையினரின் தொடர் விசாரணையில்., அவர் செய்த கொலையையும்., அவருக்கு உடந்தையா இருந்தவர்களையும் காவல் துறையினர் கைது செய்து அங்கிருந்த இளஞ்செழியினின் எலும்புக்கூட்டை கைப்பற்றினர்.
மேலும்., இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்து உடலை குழாயில் மறைத்து வைத்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.